.
ஆதியே துணை
1. மெய்ஞானிகள் மனிதன் செத்தபின் உள்ள வாழ்வைப்பற்றி பேசுவார்கள்,
சிலர் இப்படி நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான மெய்ஞானம் என்பது
செத்தபின் உள்ள வாழ்வைப்பற்றி பேசுவது அல்ல. அதைப் பேசுவது மதங்கள்.
மெய்ஞானம் என்பது மனிதாபிமான அடிப்படையில் உயர்வான வாழ்வுமுறையை இந்த மண்ணில் உருவாக்குவதற்கும் வாழ்வதற்குமான தேடல்
2. இந்த உலக வாழ்வை அடியோடு வெறுப்பவர்கள் கருத்து ஒன்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும்
3. மனிதவாழ்வில் விதியை ஆதரித்து உபதேசங்கள் தருவார்கள் கருத்து ஒன்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும்
4. விஞ்ஞானம் சொல்வதை ஏற்காமல் ஆதாம் ஏவாள் போன்ற கருத்துக்களை
ஆதரித்துப் பேசுவார்கள்
5. மனிதனுக்கு மறுபிறப்பு இருக்கிறது என்று சொல்வார்கள்.
இவை மதங்களின் போக்கு, மெய்ஞானம் இல்லை.
.
மெய்ஞானம் என்பது ஜாதி, மதம், இனம், நாடு, கடவுள் என்ற எதற்கும் கட்டுப்படாமல் எதனுள்ளும் அடங்கிவிடாமல் மனித நேயம் காணும் தேடல்
6. அதீத காமத்தால் கடவுளைக் காணலாம் என்று வலியுறுத்துவார்கள்.
இதுவும் தவறான கருத்து. இது ஒருவகை தியானநிலை ஆகலாம். அல்லது தன்னைக் கரைத்த இழந்த அமைதி நிலையெனலாம். ஆகவே இது மெய்ஞானமில்லை.
7. மெய்ஞானம் எதுவும் நிரூப்பிக்கப்படமாட்டாது. மெய்ஞானம் நிரூபிக்கப்படக்கூடியது
8. மனிதனின் பயத்தையும் அச்சத்தையும் கொண்டு வளர்வதே மெய்ஞானம்
மனிதாபிமானமற்ற நிலை தொடர்ந்தால் மனிதன் அஞ்சத்தான் வேண்டும். அந்த அச்சம்
மனிதாபிமானத்தை மனிதனுக்குத் தரக்கூடும் ஆகவே இதை ஓரளவு ஏற்கலாம். என்றாலும் இது முக்கியமானதல்ல.
9. மெய்ஞானிகள் புதியமதம், புதிய வாழ்வுமுறை உருவாக்குபவர்கள்
புதிய மதம் உருவாக்குபவர்கள் அல்ல. புதிய வாழ்வுமுறையை நிச்சயம் உருவாக்குபவர்களே
10. நம் நாட்டின் மெய்ஞானிகள் அனைவரும் மதத்திலிருந்து தோன்றியவர்கள்
அவர்களெல்லாம் மெய்ஞானிகள் அல்ல. மதத்திற்கு தாங்கள் உணர்ந்த விளக்கம் சொல்பவர்கள்.
11. மெய்ஞானத்தில் முதல்படி தொடுவதே இயலாத காரியம், இதில் கடைசி படி தொடுதல் என்பதைப்பற்றி கற்பனைகூட செய்யவேண்டாம். ஆகவே எதையும்
முழுமையாய் அறியாமல் சொல்வதே மெய்ஞானம்
மனிதநேயம் நினைத்தமாத்திரம் எவருக்கும் கைகூடும். அதற்கு மனதுதான் வேண்டும். அதற்குச் செம்மைப்படுத்தி அழைத்துச் செல்ல எத்தனையோ மெய்ஞானிகள் இதுவரை
தோன்றி இருக்கிறார்கள். இனியும் தோன்றுவார்கள்.
12. மெய்ஞானிகள் தங்களின் சொந்த கண்ணோட்டத்தைப் பொதுக்கண்ணோட்டமாக ஆக்க முயல்பவர்கள்
சீர்திருத்தம், மனிதநேயம், மனிதவாழ்வு என்பதெல்லாம் பொதுவானவை
13. உண்மை என்று எதுவுமில்லை. மனிதன் பொய். மதம் பொய்.
மனித வாழ்வு பொய். உலகம் பொய் என்று எல்லாமே
பொய் என்பவர்கள்.
மனிதர்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்வதே
உண்மையான மெய்ஞானம்
14. பிற மதக் கொள்கைகளை விலக்கிவிட்டுத் தான் பிறந்த மதம் சார்ந்தவற்றை மேலுயர்த்தி புதுவிளக்கங்கள் தருபவர்கள்
இது மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடு. உண்மையான மெய்ஞானி மதம் சார்ந்தவனல்ல.
15. சொல்லிச் சென்ற பழைய கருத்துக்களைப் பிழை என்று கண்டு தெளியாதவர்கள்
தவறுகளை அறிந்த மாத்திரம் தங்களைத் திருத்திக்கொள்பவர்களே
மெய்ஞானிகள் ஏனையோர் பொய்ஞானிகள்
16. தான் அடைந்த தோல்விகளால் வாழும் வாழ்வை முழுவதும் வெறுத்து அதனால், உலகின் எல்லாவற்றையுமே பொய் பொய் என்று குற்றம்சாட்டி உலக வாழ்விலிருந்து
தன் விருப்பத்திற்கு எதிராக அதைத் துறந்து சிக்கித் தவிப்பவர்கள்.
அப்படி விலகிச் செல்பவர்களுக்கும் வாழ்வை ஊட்டி
வாழும் வழி சொல்லி அரவணைத்து மனிதநேயம் பாராட்டி
வாழவைப்பவர்களே உண்மையான மெய்ஞானிகள்
17. வாழ்வைத் துறந்து சன்னியாசம் போகச் சொல்வோர்
மனிதநேயம் சன்னியாசம் போற்றாது
வாழவே அழைக்கும்
18. அந்த மதம் சார்ந்த மெய்ஞானிகளை அந்த மதம் சார்ந்த மக்களே போற்றி வணங்குகிறார்கள்
இதெல்லாம் மதம் சார்ந்தவர்களின் போக்கு. அவர்கள் யாரும் மெய்ஞானிகள் அல்ல
19. கடவுள் மறுப்புச் சொன்ன மெய்ஞானி என்று ஒருவரும் நம் நாட்டில் கிடையாது. மெய்ஞானிகளில் நாத்திகர்கள் உண்டு என்று சொல்லப்பட்டது. ஆனால் நம் நாட்டில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை
கடவுள் நம்பிக்கைக்கும் மெய்ஞானத்திற்கும் சம்பந்தமே இல்லை.
கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் அவர் மனிதநேய வழியில் சென்றால் அதுவே மெய்ஞானம்
20. திருவள்ளுவர் மெய்ஞானி என்று கூறப்பட்டது. திருக்குறளில் சொல்லப்பட்டவைதான் மெய்ஞானமா என்ற கேள்வி பதிலின்றி போய்விட்டது.
திருவள்ளுவர் மெய்ஞானியேதான். ஒரு மெய்ஞானி சொல்வது அத்தனையும் மெய்ஞானமாய் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிலர் 90 சதம் மெய்ஞான வழி செல்வர் சிலர் 10 சதம் செல்லக்கூடும்.
21. மெய்ஞானிகள் மதவாதிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடைப்பட்டவர்கள். அதாவது மதம் சார்ந்தவர்கள். விஞ்ஞானம் நோக்கிச் செல்பவர்கள்.





























.jpg)






