Saturday, May 31, 2014

கல்கி அவதாரம்


.
ஆதியே துணை


கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் என்றாலே நமக்கு தெரிந்தது எல்லாம் ஒரு குதிரையில் வருவார்கள் என்று ஒரு படமோ அல்லது சிலையோ குறிக்கின்றதுதான்.

குதிரையை அதிகம் வளர்த்து அதனை மேய்த்து வந்த சாதிக்கு ராவுத்தன் என்று தமிழில் வழங்கப்பட்டு வந்தது.யானையை மேய்ப்பவனுக்கு யானைப் பாகன் போல.அப்போ குதிரையை காண்பித்தது அவர்களுடைய பிறக்கும் குலத்தினை குறிக்கும் தீர்க்க தரிசனம் ஆகும்.இறுதி தீர்ப்பர் இராவுத்தர்(இஸ்லாம்) குலத்திலேதான் பிறப்பார் என்பதனை சொல்லவே அப்படி வந்தது.

சைவ ஆகம இறைப் பாடல்களில் சிவா பெருமானை "அத்தா அத்தா"என்று நிறைய பாரவான்கள் பாடியுள்ளார்கள்.தந்தையை அத்தா என்று எந்த சாதியில் அழைக்கிறார்கள்?தமிழ் பேசும் ராவுத்தர் குலத்தில்தானே.அப்ப எவ்வளவு நுண்ணியமாக காகபுசுண்டர் பிரானும் மற்றும் பல பாரவான்களும் தீர்க்க தரிசனக் கண் கொண்டு இன்ன குலத்தில் இன்ன சாதியில் வருவார்கள் என்று தங்களுடைய பாடல்களில் கூறியுள்ளது கேட்பதற்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது.


ஸ்ரீ முஷ்ணம் வராஹ மூர்த்தி கோவில் எத்தனை யுகங்கண்ட காலத்திற்கு முன் நிர்மாணிக்கப் பெற்றது.அப்போது இருந்தே துலுக்க நாச்சியார் வீட்டிற்கு மூலவர் போவதாக திருவிழா நடக்கிறதே.அதே போல் மற்ற புராதன வைஷ்ணவ ஆலையங்களான திருப்பதியிலும்,ஸ்ரீ ரங்கத்திலும்,மதுரை அழகர் கோயிலிலும் இன்றும் நடைமுறையில் இருக்கிறதே.அந்தக் காலத்தில் இஸ்லாம் மதம் ஏது?ஆகையால் இது எதைக் குறிக்கிறது?வருங்கால தீர்க்கதரிசனம் அல்லவா!"முரஹாரி கல்கிக்கு சோபனம் சோபனம்"என்று லலிதாம்பாள் சோபனத்தில் பாடி இருப்பதும் யாரைக் குறிக்கிறது?குதிரை ஏறி வருபவர் கல்கி,ராவுத்தனே என்று பாடியிருப்பது யாரை?

இன்று இறுதி தீர்ப்புக்காக எழுந்தருளி இருக்கும் நம் குலத் தெய்வமாகிய இறுதித் தீர்ப்பர் ஆகிய
அய்யா வைகுண்டர் ஆகிய
மெஸ்சியாவாகிய
மகதி அலைகிஸ் சலாம் ஆகிய
கல்கியாகிய
குரு நானக் ஆகிய
மைத்ரேய புத்தர் ஆகிய
அகூர் மஸ்தாவாகிய
பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்தான்.