Saturday, May 31, 2014

சாலைத்தமிழ் (தெய்வத்தமிழ்)


.

ஆதியே துணை

"சாலைத் தமிழ்"

தெய்வத்தமிழ், செந்தமிழ், அமுதத்தமிழ் என்றெல்லாம் போற்றப்படும் உயர்தனிச் செம்மொழியாகிய நமது தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தேழு (247) எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 'ஙகர', 'ஞகர', 'நகர' என்னும் மூன்று வரிசைகளுள் 33 எழுத்துக்கள் பயன்படுத்தப்படாமல் விடுபட்டுப்போயுள்ளளன. அவற்றைப் பயன்படுத்தாமலே வழங்கி வருகின்றனர்.

கரைகாண அறிவுக் கடலினுடைய முகடேறி முழுப்பேற்றுக் குன்றேறி னிற்கும் பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் அனைத்து எழுத்துகளையும் "ஒலியிலக்கண மரபு" குன்றாமல் காரண காரியத் தெளிவுகள் கூறிப் பயன்படுத்தித் தங்களின் அற்புத ஞான நூல்களை இயற்றியுள்ளர்கள்.



இதன் விபரம் வருமாறு:

'ங்' - என்பது ஒரு சிறப்பெழுத்து, தங்கம் என்பதனை 'ங்' (ING ) என்பதன் இனவெழுத்தான 'ங' (Inga ) வைச் சேர்த்து, 'தங்ஙம்' (Thangam ) என்றே எழுதுவது சரி. 'தங்கம்' (Thankam) என்பது முறையற்றது. இங்ஙனம் அங்ஙனம் என்பது வழக்கிலுள்ளன.

'ஞ்' என்பது மற்றொரு அற்புதச் சிறப்பெழுத்து. 'மஞ்சம்' (MANCHAM) என்பதற்குப் பதிலாக 'மஞ்ஞம்' (MANJAM) என்று எழுதுவது சரி. மலையாள மொழியில் 'குஞ்சிக் கண்ணு' என்பதற்கு 'குஞ்ஞக்கண்ணு' என்று பெயர் வழங்கி வருவது ஒலியிலக்கண மரபு குன்றாத நிலை.

'ந்' (INDH) - என்பது ஒரு சிறப்பான எழுத்து. 'அந்த' (ANTHA ) என்பதற்குப் பதிலாக அந்ந (ANDHA ) என்று எழுதுவதே முறையாகும்.

'ன்' + 'அ' (IN + A = NA ) ந் + அ (IND + A) = ந (INDHA) என்றுதானே ஒலியிலக்கணம் வழுவாமல் உச்சரிக்கப்பட வேண்டும்!
'வந்து போனான்' என்பதை மலையாளச் சொற்களில் 'வந்நு போனான்' என்று குறிப்பிடுவது சிந்திக்கப்பட வேண்டியதொன்று.

இந்த மென்மையான மூன்றெழுத்துக்களின் உயிர் மெய்யெழுத்துக்கள் அனைத்தையும் எங்கள் பெருமான் பயன்படுத்திப் பழைய, சீரிய, ஞானச் செழுந்தமிழை உயிர்ப்பித்து அதற்க்குச் 'சாலைத்தமிழ்' என்று பெயர் வழங்கியருளியுள்ளார்கள்.

அங்கம் (ANKAM) - அங்கி (ANKI) - அங்கு (ANKU) - அங்கே (ANKE)
அங்ஙம் (ANGAM) - அங்ஙி (ANGI) - அங்ஙு (ANGU) - அங்ஙே (ANGE)

அந்த (ANTHA) - அந்தி (ANTHI) - அந்தோ (ANTHO) - சந்தை (SANTHAI)
அந்ந (ANDHA) - அந்நி (ANDHI) - அந்நோ (ANDHO)- சந்நை (SANDHAI)

அஞ்ச(ANCHA) - அஞ்சா(ANCHA) - அஞ்சி(ANCHI) - அஞ்சு(ANCHU) - அஞ்சே(ANCHE)
அஞ்ஞ(ANJA) - அஞ்ஞா(ANJA) - அஞ்ஞி(ANJI) - அஞ்ஞு(ANJU) - அஞ்ஞே(ANJE)

என்று ஒலியிலக்கண மரபு குன்றாமல் எழுதியருளியுள்ளார்கள்.




மொழிக்கு முதலில் இருசுழி னகரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இருநூற்று நாற்பத்தேழு அழகிய சிலைகள் கொண்ட அற்புதமான கோபுரத்தில்
முப்பத்து மூன்று சிலைகளை எடுத்தெறிந்து விட்டால் அது முழு அழகுடயதாகுமா ?
அந்த முப்பத்து மூன்று சிலைகளையும் மீண்டும் அவையவை இருந்த இடத்தில் அழகுற வைத்து பார்த்து அதன் சீரிளமைத் திறன் வியந்த செம்மல் எங்கள் குரு கொண்டல்.

எனவே எம்பெருமான் தாங்கள் இயற்றியருளிய நூலில்:

"அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்."

என முன்னறிவிப்புக் கூறி, தாங்கள் நூல்களை இயற்றியருளியுள்ளார்கள்.
மேலும் அதற்காகப் புதியதொரு அதியற்புதமான லிபியையும் உருவாக்கி வைத்துச் சென்றுள்ளர்கள்.