Saturday, May 31, 2014

அடக்கம் - சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு


.

ஆதியே துணை

http://www.youtube.com/watch?v=84L4vh03u7k

இங்கு காண்பிக்கப்படும் படம் ஒரு பெண் கிருத்துவ துறவியின் அடக்கமான உடல் பிரான்ஸ் நாட்டில் இன்னும் ஒரு தேவ ஆலயத்தில் எந்த வித செயற்கை ரசயானமோ முறையோ சேர்க்காமல் இயற்கையாக இறைவனால் அழியாமல் காக்கபடுகின்றது.இது போன்று அடக்கமாகிய எந்த உடலும் அழிவதில்லை.இந்த நிலையை அடைவதே நாம் மானிட பிறப்பு எடுத்ததின் பயன்.



நாம் ஆன்மீக பாதையில் வெற்றி அடைந்தோமா இல்லையா என்பதனை சோதனை செய்ய வழி இருக்கா? உண்டு பொதுவாக நாம் நினைப்பது உலகில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இறக்கின்றோம் என்று.ஆனால் இறப்பு இரண்டு வகைப்படும்.

1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும்,அதாவது மலமும் ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் ஞாற்றம் வீசுகிறது(பிண வாடை).





இப்படி இறப்பதை வள்ளுவர் பெருமான் கூறும் பொழுது "அடங்காமை" என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.




இப்படி இறந்தால் அவர்கள் அடையும் இடமோ "நரகம்" என்பது வேத சட்டம்.



YAMA PHOTO (TIBET)

சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்,சிவனடியார்கள்,இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.  
அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும். இதனை வள்ளுவர் பெருமான் "அடக்கம்" என்று குறிப்பிடுகிறார்.

திருக்குறள்:
"அடக்கம் ஆமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"




அமரர் என்பது தேவர்களை குறிக்கும்.தேவர்களுக்கோ அழிவென்பது கிடையாது.எக்கோடி காலமும் வாழ்பவர்கள்.அழியாத்தன்மையை எய்த "அடக்கம்" ஆக வேண்டும்.  அப்படி ஆகாவிட்டால் "அடங்காமை"(இறப்பு)(மரணம்=மாரணம்=மா+ரணம் = பெரிய வேதனை) என்பது ஆரிருள்(நரகம்) கொண்டு சேர்த்து விடும் என்று அந்த குறள் கூறுகிறது.

இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன:

1.அந்த உடல் கெட்ட ஞாற்றம் வீசாது.தேவ மணம் வீசும்.அந்த உடலில் முழுக்கு(தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.

2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும்.அதற்க்கு நாடி கட்டு கால் கட்டு இட தேவையில்லை.

3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.

4.இந்த உடல் நேரம் ஆக ஆக வியர்வை கொட்டும்.

5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.




6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.

7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.

8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.

9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள்.
நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.
இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது.
அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.

10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்தோ உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும்.
பூமியை நாம் தாய் என்று கூறுவோம்.ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்?
அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது.ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.






சித்தர்களின் சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.
ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.
216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.


18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 ஐக் குறிக்கும்.இந்த பதினெட்டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.