.
ஆதியே துணை
ஆண்டவர்கள் அருளிய கிரந்தங்களும், திருவாயுரை விரிப்புகளும் இந்த ஜெகத்குரு, மெய்ஞ்ஞான உண்மைகளை தீப ஸ்தம்பம் போல பிரகாசிக்கும்படி, ஆதிமெய் உதய பூரண வேதாந்தம், ஆதி மான்மியம் போன்ற அபூர்வ ஞான கிரந்தங்களையும், பல்வேறு விதமான உட்பொருள் ஆதார உயிர் பதிப்பு திருவாயுரை விரிப்புகளையும், உலக மக்களுக்கு அருளியுள்ளார்கள்.
ஆனிப் பொன்னம்பலப் பலன் தரும், மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அவதாரத்தைக் குறித்து ஊணி, முன்முறையாதிய பல்லாயிரம் திடதீர்க்க தரிசனங்கள் உள்ளன. மதங்கள் பல பலவாயுள்ள அறுபத்து ஒன்பது ஜாதி
மக்கள் எல்லோரும் கூட்டமாக மெய்வழியில் ஒன்று கூடி, ஜீவ ஏற்றத்தில் ஏறிட, தெய்வமவர்களின் வரம்தரும் வேத கிரந்தங்களான இவற்றை எல்லாம் எந்நாளும் ஓதி, இரவு பகலாக மெய்ஞ்ஞான பிரகாச தேன் கடலில் ஆழ்ந்து ஆழ்ந்து பரமானந்தத்தில் திளைத்து வருகின்றனர்.
"ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்" - ஆதிமெய் உதய பூரண வேதாந்த நூலில் பூரணப் புதையல், மெய்ந் நிலை போதம், மெய்ம்மண ஞானம், அமுத கலைஞான போதம் என்ற பல்வேறு மிக உயர்ந்த தத்துவாதீக ஞான போதனை பகுதிகளைத் தந்திருக்கிறார்கள். சர்வ வேதங்களின் அகமிய பெருமறை சாஸ்திரங்களில் பின்னி இருந்தவை அனைத்தும் தெள்ளெனப் பிளந்துக்காட்டும் ஞான நூல் இது. ஆண்டவர்கள் அருளிய வேதத்தில், ஞான நிலையின் இயல், யோக காட்சிகள், பிறவி மாறுதல், நாத தேகம், விட்ட தொட்ட குறை, உலக அன்னையாக வெளி வரும் மாதேவியின் தோற்றம், தேவ நிலையில் ஏறி நிற்கும் வாணி சக்தியின் காட்சி போன்ற பல யோக வைப்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டுகிறார்கள்.
பெறற்கரிய ஞான நிலைகளைத் தொட்டுத் தொட்டுக் காட்டி முடிவான பூரண ஞானநிலையையும் எடுத்துரைத்து உள்ளார்கள். ஆதி மான்மியம் மான்மியம் என்ற ஆண்டவர்களின் இந்த சரித நூலைப் படிப்போர் அனைவரையும், மூச்சு லயமாகிய மனோலய மந்திர தவச்செயலில் மூழ்கடிக்கச் செய்யும் ஒரு தவ நூலாக, சுந்தரத் தமிழில் அருளியுள்ளார்கள். நரரை மக்களாக்கி மக்களைத் தேவராக்கும் இந்த மெய் ஞான தேவ மக்கள், ஆண்டவர்களின் வரலாற்று நூலான ஆதிமான்மியத்தைத் தினமும் இரவு பகல் எந்த நேரமும் தோத்தரித்துக் கொண்டிருக்கும் இந்த தவமுறை பயிரேற்றம், மனுத்தலைகளுக்கு தவசெழிப்பேற்றமாக உள்ளது.


.jpg)