.
ஆதியே துணை
மெய்வழி சாலையம்பதியில் எடுத்து வைக்கப்பெற்றுள்ள திருவிழாக்கள் மெய்வழி பொன்னரங்க தேவாலயத்தில் நிகழ்ந்து வருகின்றன.
திருவிழா தேவ நிகழ்வுகள்
1. தை முதல் நாள் மக்களுடைய நவக்கிரக கோள்களை அகற்றி அனுக்கிரகம் செய்வதற்கு முக்கூர் கத்தி கொண்டுபானைப்பலி ஏற்கும் பொங்கல் திருவிழா நிகழ்கிறது. மறுநாள் செல்வப் பொங்கல் நிகழ்கிறது.
2. பங்குனி பௌர்ணமி முன்தினம் பாட்டையர் தனிகைமணி வள்ளல் அவர்களிடம் ஆண்டவர்கள் ஞானோபதேசம் பெற்று ஆட்கொள்ளப் பெற்ற நாளான பிறவானாள் பிறப்புத் திருவிழா நிகழ்கிறது.
3. வைகாசிப் பூரணை நாளில் உலகம் முழுவதினுக்கும் தெய்வீக திருவருளை அருள, ஆடுமேய்ப்பு திருக்கோலம் ஏற்ற காட்சியும் தேவத்திருமுடி சூடப்பெற்ற கங்கண திருக்காப்பு காட்சியும், பாசுபத தவக்கோல காட்சியும் நிகழ்கிறது. மறுநாள் தேவரத கருமான குடிக்காட்சியும், புத்தாடை புனைச்சீர் அணியும் நிகழ்ச்சியும் நிகழ்கிறது. நன்னம்பிக்கை வைப்பு என்னும் பாபவிமோசன திருமந்திரமும் ஓதப்பெறுகிறது
www.youtube.com/watch?v=tQ5BMhR4A-0
.http://www.youtube.com/watch?v=qwBFJ_OFciQ
4. புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் மெய்வழி குல மக்களின் தூலப்பிணி நீக்கி அருள்வரம் தரும் அம்மையப்பராக எழுந்தருளும் பிச்சை ஆண்டவர் திருக்கோல திருவிழா நிகழ்கிறது.
5. கார்த்திகை திங்களில் யுகத் தவ காட்டில் கார்க்கும் தீ கைக்கொண்ட கார்த்திகையர் தீப திருக்காட்சி திருவிழா நிகழ்கிறது.
6. மார்கழி கடைசி நன்னாள் அன்று சாகாவரத்தைச் சலிக்காமல் வழங்கி புதுயுக வித்துக்களைத் தேர்ந்தெடுக்க வந்த ஆண்டவர்களின் திரு அவதாரத் திருநாள் கொண்டாடப் பெறுகிறது.
பொன்னரங்க தேவாலய ஆடலங்கள் மெய்வழி பொன்னரங்க தேவலாயத்தின் திருசன்னிதானத்தில், நாள் தோறும் பாத பூசை பிரார்த்தனைகள் செய்து, ஆலய அலங்காரம் செய்து அமுது படைத்தல், நேர்த்திக்கடன் சமர்ப்பித்தல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது. அனந்தாதி தேவர்கள் தங்களின் புனல்ஜென்ம வழிபாட்டை அவ்வப் போது நிகழ்த்துகிறார்கள்.
மெய்வழி மக்கள் ஜீவதேக ஜீவமுத்தி பெற்று பரமபத வாழ்வில் குடியேறிய சாவாவர நித்திய ஆண்டு பூர்த்திகள் நிகழ்கின்றன. அடக்கமாகிய 3-ஆம் நாள் ஜீவபந்து உரிமை காட்சி, 40-ஆம் நாள் ஆன்ம சஞ்சார உரிமை காட்சி போன்றவைகளும் நிகழ்கின்றது. குழந்தைகளுக்கு நாமம் சூட்டல், தீர்த்தம் போடுதல், காதுக்குப் பொன் பூட்டல், மற்றும் திருமண வைபவங்கள் போன்ற அனந்தானந்தம் நிகழ்வுகள் நாள் தோறும் நடந்து வருகின்றது.
தெய்வமவர்களின் திருமேனி சயிலத்தில் பூத்து உதித்த தெய்வ திருக்குமாரர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள் இன்று மெய்வழிச் சாலையின் ஆதினராக இருந்து வருகிறார்கள். ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள கொடி ஏற்றங்கள், மற்றும் திருவிழாக்களை இவர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். மெய்வழி மக்களின் முதன்மைத் தலைவராகவும் திகழ்கிறார்கள்.
