.
ஆதியே துணை
மெய்வழி பற்றிய குறிப்பு
1. நிறுவனர்: வித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்
2. மதம் : மறலிகை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்
3. குலம்: சத்திய தேவ பிரம்மகுலம் (வான்குலம்)
4. கோத்திரம்: ஆங்கிரச கோத்திரம்
5. சாதி : தன்னை அறிந்து சாதித்தவர்
6. சபை : எமனணுகா பரிசுத்தவான்களின் சபை
7. கல்வி : மெய்ப்பாலறியும் மெய்க்கல்வி
8. கலாசாலை : சதுர் யுகங்களுங்கண்ட மெய்மை
9. க்ஷேத்திரம் : மெய்குண்டம் என்னும் குரு க்ஷேத்திரம்
10. ஊர் : உயிர்ப்பயிரேற்றும் நித்திய சுமங்கல ஊர்
11. பலன் : சாவாவரம், நாறிச்சாகும் நரர்களைத் தேவராக்குதல்
12. வழி : சர்வ புவனாதியங்கட்கும் உய்வழி கூட்டும் மெய்வழி
13. கொடி : வெண்துகிலில் கிள்நாமம். கூர் இல்லாபிறை வடிவம்
14. திருவிழாக்கொடி : பூராங்கொடி
15. அடையாளம்: செந்நிற காஷாய தலைப்பாகையில் கிள்நாமம்
16. திருமணம் : நீதித் திருமணம்
17. மங்கள தாரகை (மாங்கல்யம்) : புள்ளியை மையமாக்கொண்ட ஆறு இதழ்கள்
18. வேதம் :
1. ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
2. ஆண்டவர்கள் மான்மியம்
3. எம படரடி படு கோடாயிதக்கூர்
4. திருமெய்ஞ்ஞானக் கொரல் பதி மறைவிற்குப் பின்னர் தொகுத்தவை
5. வான்மதிக் கொரல்
6. விஸ்வனாத திரு ஒலி வசனம்
7. திருமெய்ஞ்ஞான அருளமுதம்
8. திருமெய்ஞ்ஞான தேவாமிர்தம்
9. திருமெய்ஞ்ஞான தில்லையமுதம்
10. மெய்வழி தெய்வத்தின் திருவரலாற்று தடம் சுவடுகள்
19. சமரசம் : தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், பட்டம் பெற்றோர்கள் ஆகியோர் தங்கள் வசதிகளைத் துறந்து எளிமையாக கூரைக்குடிசையில் ஏழைகளோடு எளிமையாக வாழ்கிறார்கள்.
20. நீதம் : வெவ்வேறு மதத்தின் 69 ஜாதிகளைச் சேர்ந்த பல ஆயிரமக்கள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் ஒன்றாகி வாழ்கிறார்கள்.
21. நெறி : கொலை, களவு, போதை, விபசாரம், பொய், புகை (சிகரட்), சினிமா பார்த்தல் ஆகிய ஏழு குற்றங்களும் விலக்கி பரிசுத்தமாக வாழ்தல்
22. மூலமந்திரம் :
மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங்
கோடிகால மக்களிடத்திலுமுள்ள சர்வமூலமந்திர
நிரூபிக மகான்மியராகிய யுகவான்
சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு
23. மகா சங்கல்ப மந்திரம்: (காலை 7 மணிக்கு)
மறலி என்கிற எமனுடைய அவமான அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம், கசப்பு தீட்டு பிணநாற்ற ஜலம் வெளியாகி யுகங்கோடிகால நரக வேதனைக்குப் போகாமல் அதை மாற்றி, பரமபத நித்திய மகிழ்ச்சி வாழ்வு வரத்தில் ஏற்றவே சதுர் யுகத்திலும் உண்டான எல்லா ஜாதி, மத, வேதங்களும் வந்திருக்க, அந்த அகமிய மகா அதிவல்லப தெய்விக பிரம்மவித்தைச் செயலானது, மாநெடுங்காலங்களாக மக்கள் புழக்கத்தில் இல்லாது உலகத்தை விட்டு மறந்து மறைந்தே போய்விட்ட இறுதிக்காலமாகிய இது நேரம், எமபயத்தைக் கடத்தி அதே பிரம்ம வித்தையாகிய சுவர்க்க பதி பரமபத முத்திச் செயலினில் ஏற்றிவைக்கும் கல்கி மகதியென்னும் மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடைய ஊண் உறக்கமற்ற எங்கள் குலதெய்வம், மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தில் நாங்கள் சேர்ந்து ஆகியிருக்கின்றோம். எதார்த்த நன்மனத்தினர் யாராக இருந்தாலும் சேர்ந்து தேவப்பிறப்பிலே பிறந்து ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களுடைய ஆசீர்பாதம்
24. பாவ மன்னிப்பு மந்திரம் (சுருக்கம்)
எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆண்டவர்களே! எம்மை இரட்சித்து ஆளும் இராஜாவே! யான் அறிந்து செய்த பாவங்களைத் தொட்டும், அறியாமற் செய்த பாவங்களைத் தொட்டும், அடக்கமாய் செய்த பாவங்களைத் தொட்டும், வெளிச்சமாய் செய்த பாவங்களைத் தொட்டும், எல்லாப் பெரும்பாவங்களையும் எல்லாச் சிறுபாவங்களையும் உணர்ந்து நினைந்து உருகி வணங்கி, மன்னிக்கும்படி உங்களை மன்றாடி வேண்டுகிறோம் ஆண்டவர்களே! எந்தச் சிறு அளவிலும் இன்னல் என்னும் நரகம் எங்களைத் தீண்டாது காத்தருளும்படி நும் பாதத்தில் வீழ்ந்து அழுது வேண்டுகிறோம் ஆண்டவர்களே

