Saturday, May 31, 2014

இறுதித் தீர்ப்பராக வந்திருப்பவர் யார்?


.

ஆதியே துணை


இன்று இறுதித் தீர்ப்பராக வந்திருப்பவர் யார்?

திராட்சத்தோட்டத்துக்கு எஜமான்(சர்வத்தையும் படைத்த ஆதி பிதாவாகிய நம் குலத் தெய்வம் மெய்வழி சாலை ஆண்டவர்கள்)


1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.

And he began to speak unto them by parables. A certain man planted a vineyard, and set an hedge about it, and digged a place for the winefat, and built a tower, and let it out to husbandmen, and went into a far country.

2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.

And at the season he sent to the husbandmen a servant, that he might receive from the husbandmen of the fruit of the vineyard.

3. அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.

And they caught him, and beat him, and sent him away empty.

4. பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.

And again he sent unto them another servant; and at him they cast stones, and wounded him in the head, and sent him away shamefully handled.

5. மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
And again he sent another; and him they killed, and many others; beating some, and killing some.

6. அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.

Having yet therefore one son, his wellbeloved, he sent him also last unto them, saying, They will reverence my son.

7. தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

But those husbandmen said among themselves, This is the heir; come, let us kill him, and the inheritance shall be ours.

8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.

And they took him, and killed him, and cast him out of the vineyard.

9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?

What shall therefore the lord of the vineyard do? he will come and destroy the husbandmen, and will give the vineyard unto others.

குறிப்பு:

எஜமான் = ஆதிப் பிதா

தோட்டம் = உலகம்

தோட்டக்காரன் = மெய் தேட்டம்(இறைவனிடம் விசுவாசம் இல்லாத) இல்லாத உலக மக்கள்(கலி நீசர்கள்)

ஊழியக்காரன் = தீர்க்கதரிசிமார்கள்

குமாரன் = இயேசு பிரான்

திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான்
அந்த மற்றவர்கள் = மெய் தேட்டம் உள்ள தேவனுக்கு உரிய பிள்ளைகள்(மனு ஈசர்கள்)